Monday, May 28, 2012

மம்தாவுக்கும் பானர்ஜி மட்டும் விலை ஏறவில்லையே ?


தற்பொழுது இந்திய முழுவதும் ஆட்டிப்படைக்கும் முக்கிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது பெட்ரோல் விலை ஏற்றம் சில தினங்களுக்கு முன் 
திடிரென்று ரூபாய் 7.50 காசு வரை பெட்ரோல் நிறுவனங்கள் ஏற்றியது இதன் காரணமாக நாடு முழுவது பல கட்சிகள் அரசுக்கு எதிராக போரட்டங்கள் நடத்துகிறது - நடத்தபோகிறது இதை எல்லாம் பார்க்கும்போழுது நடப்பு ஆண்டு ரயில்வே நிதி நிலையை அறிக்கையில் ரயில்வே முன்னாள் தினேஷ்
திர்வேதி அவர்கள் கட்டணத்தில் சில காசுகள் கூட்டினார் அதுவும் ரயில்வே துறையை மற்றும் பல வசதிகளை மேம்படுத்த இந்த விலை ஏற்றம் என கூறினார் ஆனால் இதை கண்டு கொதித்த மம்தா பானர்ஜி குய்யோ முய்யோ என்றார் அத்துடன் இந்த விலை ஏற்றம் செய்யத தினேஷ் திரிவேதியை மற்ற வேண்டும் அத்துடன் தனது கட்சியை சேர்ந்த முகில் ராய்யை ரயில்வே மந்திரி ஆக்க வேண்டும் என மத்திய அரசை நிர்பந்தம் செய்து முகில் ராய்யை புதிய ரயில் மந்திரி ஆக்கினர் .



மம்தா இந்த விலை ஏற்றாத்தால் மக்கள் பதிப்புடைவார்க்ள் போன்ற காரணங்களை சொன்னார் ஆனால் தற்பொழுது இந்த பெட்ரோல் விலை ஏற்றத்தால் ஏற்படும் பதிப்புகள் ரயில் கட்டண ஏற்றத்தை விட அதிகம் என்பது நிச்சயம் . இதன் பதிப்புகள் நடுத்த மக்களை அதிகம் பாதிக்கும் செயல் ஆகும் ஆனால் இந்த விலை ஏற்றத்தை குறைக்க எனக்கு தெரிந்த வரை ஒரு மம்தா ஒரு கல்லை கூட போடல .......! .

காரணங்கள் ( ஒரு யூகம் தான்).

1.அவர்கள் கட்சியை சேர்ந்தவர் பெட்ரோல் மந்திரியாக இல்லை
2.மம்தா பானர்ஜிக்கு சில காசுகள் விலை ஏறினால் தான் கோபம் வரும் மற்றப்டி ரூபாய் கணக்கில் ஏற்றினால் கோபம் வரது.
3.ஒருவேளை அவர் பெட்ரோல் மந்திரியாக இருந்துயிருந்தால் விலை குறைக்கும் படி கேட்டுயிருப்பார் ஆனால் அவர் முன்னாள் ரயில் மந்திரி அவர் அதனால் என்னவோ ஒரு துறை பாசமாக இருக்கும்.

மேலும் உங்களுக்கு ஏதாவது காரணம் தோன்றினால் பின்னோட்டத்தில் போடுங்க..................



No comments:

Post a Comment